1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூலை 2019 (19:11 IST)

ஜெயலலிதாவின் ஆட்சி நிலைத்திருக்கக் காரணம் ’ இருவர்தான் ’ - தங்கமணி உருக்கம்

இன்று காலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தமிழகத்தில் நிலை மற்றும் அரசியலை மிக மோசமாக விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் சிவி சண்முகம் :புதுச்சேரி ஆளுநருக்கு எங்களைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது : அவர் சரியாக நிர்வாகம் நடத்துகிறரா ? அங்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறதா என்பது குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என கோபத்துடன் தன் கருத்தை தெரிவித்தார்.
 
இதனையடுத்து ஆளுநர் குறித்து சட்டசபையில் பேசக்கூடாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கில் இருப்பதை குறித்துப் பேசக் கூடாது என்றும் கூறிய சபாநாயகர் அவர்கள் இருவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.இதற்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அவர்  தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள்  எதிர்ப்பு தெரிவித்து கிரண்பேடியின் டுவிட்டர் பதிவை கண்டித்தும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகத் தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் கூறியதாவது : நடைபெற்ற இடைத்தேர்தலில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதை குறிப்பிடும் வகையில் 9 நவரத்தினங்களை வைத்து அழகு பார்க்கும் முதல்வர் மற்றும் துணைமுதல்வர் என்று தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுடன் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்று விமர்சித்தவர்கள் முன் இந்த ஆட்சி நிலைத்திருக்கும் என்று கூறிய ஜெயலலிதாவின் கருத்தை உண்மையாக்கிய முதல்வர் மற்றும் துணைமுதல்வருக்கு வாழ்த்துக்கள் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.