1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (17:45 IST)

ரஜினியின் இரண்டு நிமிட பேட்டிக்கு அரசியல்வாதிகளின் அதீத ரியாக்சன்

‘2021ஆம் ஆண்டு தமிழக மக்கள், தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்றும் மேலும் தனக்கு கிடைத்த விருது குறித்தும் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இரண்டு நிமிடம் அளித்த பேட்டி ஊடகங்களையும் சமூக வலைத்தளங்களையும் பரபரப்புக்கு உள்ளாகிவிட்டது. அனேகமாக இன்று அனைத்து நியூஸ் சேனல்களிலும் இதுதான் விவாதமாக இருக்கும். இந்த நிலையில் ரஜினியின் இந்த பேட்டிக்கான ரியாக்சன்களை பார்ப்போம்
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: எந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும், ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும் என்றும், வரும் 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் என்றும், 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார்
 
நாம் தமிழர் கட்சியின் சீமான்: அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் என்னும் வெற்றுப்பிம்பம் இனமான தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021ல் நடக்கும், நடந்தே தீரும் என்றும், தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும் என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் ரஜினிகாந்த் பேசி வருகிறார் 
 
கராத்தே தியாகராஜன்: ரஜினி கட்சி தொடங்குவதை உறுதி செய்துவிட்டார். 2021ல் அவர்தான் முதல்வர்
 
முத்தரசன்: தமிழகத்தில் ஆன்மிக அரசியல் என்பதை மக்கள் ஒருபோதும் வேரூன்றவிட மாட்டார்கள். ஆன்மிக அரசியல் என்பதை பாஜகவிற்கு ஆதரவாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும்
 
தராசு ஷ்யாம்: ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் அதிசயம் நிகழ்த்தி கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அதிசயம் ரஜினிக்கு நிகழுமா? என்பதுதான் கேள்வி. தொடர்ந்து பேட்டி கொடுப்பதால் அரசியலில் உச்சத்திற்கு சென்றுவிட முடியாது. பட வெளியீட்டுக்கு முன் எங்கே, எப்போது கேள்வி எழுப்பினாலும் பதிலளிப்பார்.
 
இன்னும் யார் யார் என்னென்ன சொல்ல போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்