அலங்காநல்லூரை கலங்கடித்த ராவணன்! – சிதறி ஓடிய வீரர்கள்!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளையர்களை அலற விட்ட ராவணன் காளை அலங்காநல்லூரிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலையொட்டி மதுரை அருகே அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியானது உலக புகழ் பெற்றதாகும். இன்று அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டிலிருந்து 80 க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்துள்ளனர்.
முன்னதாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில் புதுக்கோட்டை காவல் ஆய்வாளரின் காளை ராவணன் யார் கையிலும் சிக்காமல் வீரர்கள் மீது சீறி பாய்ந்தது. இதனால் அவனியாபுரத்தில் சிறந்த காளையாக ராவணன் தேர்வானது. இந்நிலையில் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் ராவணன் சீறி பாய்ந்துள்ளது. வீரர்களை முட்டி வீழ்த்தியபடி யார் கைகளிலும் சிக்காமல் சென்றது ராவணன். இன்றைய ஜல்லிக்கட்டிலும் ராவணன் சிறந்த காளையாக தேர்வாக வாய்ப்பிருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.