வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 18 ஜனவரி 2019 (13:20 IST)

குட்கா விவகாரத்தில் ஸ்டாலினுக்கு வந்த சிக்கல் ! அடுத்து என்ன நடக்கும்...

குட்கா விவகாரத்தினை கையில் எடுத்துள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சை அளிக்கும் விதமாக, கரூரில் மாஜி அமைச்சரின் உறவினர் குட்கா விற்று வந்ததை   கரூர் காவல்துறை நிரூபித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் சுங்கச்சாவடியில் கடந்த, 14 ம் தேதி நாமக்கல் போலீசார், பெங்களூரில் இருந்து கரூருக்கு வந்த கன்டெய்னர் லாரியில் நடத்திய சோதனையில், 3,563 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.

அதன் டிரைவர் பாலசுப்பிரமணியனிடம் நடத்திய விசாரணையில், சின்ன ஆண்டாங்கோவில் ஏ.கே.எஸ்.காலனி தங்கராஜ், 51, கரூர் ராயனூர் கே.கே.நகர் செல்வராஜ், 46, ஆகியோரின் மளிகை கடைக்கு ஏற்றிச் செல்வது தெரியவந்தது.
 
இதையடுத்து, ராயனூர் வெள்ளக் கவுண்டனூர் குடோன்களில் இருந்து, 74.21 லட்சம் ரூபாய், மதிப்புள்ள, 14.84 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராயனூர் கே.கே.நகர் குடோன் உரிமையாளர், தி.மு.க.,வை சேர்ந்த கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி என தெரியவந்தது. வாடகைக்கு எடுத்து குட்கா பதுக்கி வைத்த தங்கராஜ், செல்வராஜ் ஆகியோரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்துள்ளனர். 
 
இந்நிலையில், முதல் குற்றவாளியான தி.மு.க வினை சார்ந்த கொங்கு மணி என்கின்ற சுப்பிரமணியன் வழக்கு பதியப்பட்ட நிலையில் தலைமறைவாகியுள்ளார்.  மேலும், தலைமறைவாக உள்ள, அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளார். இவர் கடந்த மாதம் செந்தில்பாலாஜியுடன், தி.மு.க.,வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குட்கா அரசு என்று தமிழக அரசினையும், குட்கா புகழ் அமைச்சர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் என்றும் ஆங்காங்கே குறிப்பிட்டு வந்த நிலையில் மாஜி அமைச்சர் அதாவது தி.மு.க வில் இணைந்த மாஜி அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் உறவினரும், அண்மையில் தி.மு.க வில் இணைந்தவருமான கொங்கு மணி என்கின்ற சுப்பிரமணி என்பவரே குட்கா விவகாரத்தில் முதல் குற்றவாளியாக இருப்பது தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் வரும் 22 ம் தேதி தி.மு.க தலைவர்   ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் நிலையில் எப்படி ஸ்டாலினை சமாதானப்படுத்துவது என்கின்ற முயற்சியில் செந்தில் பாலாஜி தரப்பினர் தீவிரமாக உள்ளன.

சி.ஆனந்தகுமார்