ஒரு நிமிடத்தில் குழந்தையைக் கடத்திய நபர் ! பதவைக்கும் சிசிடிவி காட்சி
சென்னை ரயில் நிலையத்தில் பெற்றோர்கள் உள்ளபோதே குழந்தையைக் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மத்திய ரயில் நிலையத்தில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த ராம் சிங் மற்றும் நீலாவதி தம்பதியர் தங்களது 3 வயது குழந்தையுடன் ரயிலுக்காகக் காத்திருந்தனர். அப்போது இரவு நேரம் நள்ளிரவு 12 மணியை நெருங்கியதால் பெற்றோர்கள் சிறிது கண்ணயர்ந்தனர். அங்கு குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. பின்னர் தூக்கம் கலைந்து குழந்தையை பார்த்தபோது காணவில்லை.
இதனையடுத்து அங்குள்ள ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளைக் ஆராய்ந்தனர். அதில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை ஒருநபர் தூக்கிச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து போலீஸார், அனைத்து காவல்துறையினருக்கும் ரயில் நிலையாங்களுக்கும் தகவல் தெரிவித்து அந்த நபரைக்கண்டால் தகவல் தெரிவிக்கும்படி அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். குழந்தையைக் கடத்திய குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.