அன்புமணியின் புதிய திட்டம் பலிக்குமா?
அன்புமணியின் புதிய திட்டம் பலிக்குமா?
விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், பாமக வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அன்புமணி சில புதிய திட்டங்களை கட்சியினர் மத்தியில் அறிமுகம் செய்துள்ளாராம்.
நடந்து முடிந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கிய அன்புமணி பென்னாகரம் தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் பாமக கடும் அதிர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாமக அதிக வெற்றிப் பெற புதிய வியூகங்களை வகுத்துள்ளாதாம்.
அதன்படி, தற்போது தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களையே உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட வைக்க உள்ளாராம். காரணம், மக்களிடம் நல்ல அறிமுகம் இருந்தால் தான் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதால் இந்த முடிவாம்.
வன்னியர்கள் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து வேட்பாளர்களை களம் இறக்க முடிவு செய்துவிட்டாராம். மேலும், வன்னியர் சங்கத்தை தூசு தட்டி அதை புலிப்பாய்சலில் கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம்.