1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified வெள்ளி, 7 அக்டோபர் 2022 (22:44 IST)

புதிய நிழற்குடை மண்மங்கலம் அருகே வீணாக கிடக்கும் அவலம்

kerala
பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நிழற்குடை மண்மங்கலம் அருகே வீணாக கிடக்கும் அவலம்
 
முன்னாள் எம்.பி மற்றும் திமுக நிர்வாகியுமான கே.சி.பழனிச்சாமி என்றால், தமிழக அளவில் தெரியாத நபர்களே கிடையாது. அந்த அளவிற்கு பெயர் பெற்றவர், கடந்த காலத்தில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ வாக திமுக வில் இருந்த நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தவர் ஆவார்.

தற்போது அவருடைய எம்.பி யின் காலத்தில் செம்மடை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு தொகுதி மேம்பாட்டு திட்டம் கீழ், ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியில் 2008 -2009 ம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கப்பட்டும் தற்போது சீரமைக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதர்மண்டி முன்புறம் காணப்படும் நிலையில், எந்த வித பயன்பாடும் இல்லாமல் அப்படியே பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் தான் திமுக எம்.பி கே.சி.பழனிச்சாமி என்று ஒதுக்கப்பட்டார். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியிலும் கே.சி.பழனிச்சாமி ஒதுக்கப்படுகின்றாரா ? என்ற கேள்வியும் எழுகின்றது. இந்த பயணியர் பேருந்து நிழற்குடையின் முன்புறம் சீரமைத்தால் போதும், இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றது.

Edited by Sinoj