திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (15:26 IST)

சேலத்தில் ரமணா படத்திற்கு நேர்மாறாக நடைபெற்ற சம்பவம்

சேலத்தில் உயிரோடு இருந்த நபரை இறந்துவிட்டார் எனக் கூறிய நபர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
விஜயகாந்த் நடித்து மாபெறும் வெற்றி பெற்ற ரமணா திரைப்படத்தில் பணத்திற்காக இறந்து போன நபரை, காப்பாற்றுவதாகக் கூறி மருத்துவமனை நிர்வாகம் சம்மந்தப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கும்.
 
இந்நிலையில் சேலம் பெரமனுாரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் என்ற நபர் கடந்த 18ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் கோமா நிலையில் இருந்து மீளவில்லை.
 
மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர் மூளைச்சாவு அடைந்து இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிறிஸ்டோபரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு, 4.70 லட்சம்ரூபாய் செலுத்தி, உடலை வீட்டுக்கு எடுத்து வந்தனர்.பின் கிறிஸ்டோபர் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்தனர். சிறிது நேரத்தில் அவர் இருமினார். இதனால் உறவினர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.
 
தவறான தகவலளித்த தனியார் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிறிஸ்டோபரின் உறவினர்கள் மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.