திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2018 (14:01 IST)

இராவணனாக மாறிய சேலம் எம்.எல்.ஏ!

சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சக்திவேல் புராண நாடகத்தில் இராவணன் வேடமிட்டு நடித்த சம்பவம் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 
சேலம் மாவட்டம் கல்லாங்குத்து பகுதியில் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளிம் 95வது குரு பூஜையும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவும் நடந்தது. இந்த விழாவில் புராண நாடகம் நடந்தது. அதில் சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சக்திவேல் பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
 
பின்னர் நடைபெற்ற புராண நாடகத்தில் இராவணன் வேடமிட்டு நடுத்தார். இவரது நடிப்பையும், வசனத்தையும் கேட்டு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். நாடகம் முடிந்ததும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துக்கொள்ள அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.