திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (09:47 IST)

சந்தேகத்தால் மனைவியை கடப்பாரையால் குத்திக் கொன்ற கணவன் கைது

சேலத்தில் கணவன் மனைவிக்கிடையே நடந்த பிரச்சனையில், கணவன் மனைவியை கடப்பாரையால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(53), இவரது மனைவி வள்ளி(45). விசைத்தறி உரிமையாளரான இவர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இவர்களின் சண்டை முற்றவே ஆத்திரமடைந்த மாரிமுத்து அவரது மனைவியை கடப்பாரையால் குத்திக்கொன்றார். பின்னர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். மனைவி தன்னை கொள்ள முயற்சித்ததால் அவரிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே அவரைக் கொன்றதாக போலீஸாரிடம் மாரிமுத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.