4 மாத குழந்தையை அடித்தே கொன்ற கொடூர தந்தை ...
விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் அருகே உள்ள கோட்டிக்குப்பத்தில் வசித்து வருபவர் மதியழகன் ( 30) . இவருக்கு பொன்னி ( 24 ) என்ற மனைவியும் உள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் குடித்துவிட்டு வந்த மதியழகன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கடும் கோபம்டைந்த மதியழகன் தன் 4 மாத பெண் குழந்தை மீராவை சுவற்றில் தூக்கி வீசி எறிந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிஞ்சுக் குழந்தை பலமாக அழுதது.
இதனையடுத்து, குழந்தை மீராவை தாய் பொன்னி மரக்காணம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.