1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , செவ்வாய், 9 ஜூலை 2024 (10:11 IST)

இந்து துறவி பேரவையினர் வெங்கடேசன் எம்பியை,கைது செய்ய புகார் மனு!

நாடாளுமன்றத்தில்,மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், செங்கோலை பற்றியும் , மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு துறவியர் பேரவை புகார் அடங்கிய மனுவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.
 
மேலும், தபால் மூலம் தமிழக ஆளுநர், ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் தபால் மூலம்  புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
துறவியர் பேரவை  வழங்கிய மனுவில், மதுரை எம் .பி. சு. வெங்கடேசன் செங்கோல் பற்றியும், மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் நாடாளுமன்றத்தில் தவறாக பேசியதாகவும், அவர் விதியை மீறியதாக, அவர் எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டும், அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த புகார் மனுவை  மாநில அமைப்பாளர் சுடலை ஆனந்தன், தலைமையில் நிர்வாகிகள், மதுரை மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுத்தனர்.