ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (16:18 IST)

பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் தொடங்கும் F4 கார் பந்தயம்...

தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஃபார்முலா-4 ரேசிங் ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் இன்று மற்றும் நாளை இரவு நடைபெறுகிறது.
 
இதற்காக தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ. தொலைவுக்கு பிரத்யேக பந்தய தளம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
போட்டி நடைபெறும் பகுதியில் 8000 ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், மின் விளக்குகள், இரும்பு தடுப்புகள் போன்ற அனைத்து ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன. 
 
மாலை 5.50 மணி முதல் 6.30 மணி வரை பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
 
இரவு 7.10 முதல் 8:45 மணி வரை பல்வேறு பிரிவுகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.