ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 31 ஆகஸ்ட் 2024 (07:14 IST)

புது வரலாறு படைக்கட்டும்!.. பார்முலா 4 கார் ரேஸ் குறித்து அமைச்சர் உதயநிதி..!

udhayanidhi
தெற்காசியாவிலேயே முதன்முறையாக நடைபெறுகிற பார்முலா 4 போட்டி இரண்டு நாட்கள்  சென்னை தீவுத்திடல் பகுதியில் நடைபெறவுள்ளது. 
 
இப்போட்டிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். 
 
போக்குவரத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் – பொதுமக்கள் அமர்ந்து பார்க்கின்ற Grand Stands, மாண்புமிகு அமைச்சர்கள் – நீதியரசர்கள் - அதிகாரிகளுக்கான Galleries, Race Drivers’ Stand – Garage போன்ற வசதிகளைப் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் அது தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தோம். 
 
மேலும், ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கான வழிகள் – சிகிச்சையிலிருப்போர் & மருத்துவமனை செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படாத வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தோம். 
 
சென்னையில் நடைபெறுகிற இந்த பார்முலா 4 போட்டியினைத் திட்டமிட்டபடி சிறப்பாகவும் – பாதுகாப்புடனும் – மக்கள் மகிழும் வண்ணமும் நடத்திட சென்னை மாநகராட்சி – காவல்துறை - உள்ளிட்ட பல்வேறு  துறைகளின் அதிகாரிகள் – அலுவலர்களை வலியுறுத்தினோம்.
 
பார்முலா 4 கார் பந்தயம் புது வரலாறு படைக்கட்டும்!
 
Edited by Siva