வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 31 ஆகஸ்ட் 2024 (07:24 IST)

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை.. சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!

Flight
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதால், சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் ஒன்பது விமானங்கள் வருகை பாதிக்கப்பட்டதாகவும் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் 10 விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டதாகவும் மொத்தம் 19 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது, இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், திருப்பூர், தேனி, திருநெல்வேலி மற்றும் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

Edited by Siva