வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2018 (04:19 IST)

ஜெயலலிதா-ஸ்ரீதேவி மரணங்கள்: சில ஒற்றுமைகளும், விசாரணையில் சில வேற்றுமைகளும்

கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கடந்த வாரம் சனிக்கிழமை மரணம் அடைந்த ஸ்ரீதேவிக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

1. இருவருமே மாரடைப்பில் இறந்ததாக கூறப்பட்டது.

2. மரணத்திற்கு பின்னர் இருவரது உடல்களும் என்பார்மிங் செய்யப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களை விசாரணை செய்யாமலேயே என்பார்மிங் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி மரணம் குறித்து துபாய் போலிசார் தீவிர விசாரணை செய்து, அந்த மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே என்பார்மிங் செய்யப்பட்டது. ஏனெனில் என்பார்மிங் செய்யப்பட்ட பின்னர் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாது

3. ஜெயலலிதா உடல் என்பார்மிங் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. பொதுவாக இறப்புக்கு ஒருவரது உடல் பின் விமானம் அல்லது கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் மட்டுமே என்பார்மிங் செய்யப்படும். ஸ்ரீதேவியின் உடல் விமானத்தில் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே என்பார்மிங் செய்யப்பட்டது.

4. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சிசிடிவி மாயமாகிவிட்டது. ஆனால் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டல் அறையின் சிசிடிவி வீடியோ முழுவதும் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டது.

5. முழு விசாரணையும் முடிந்த பின்னரே ஸ்ரீதேவி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எந்தவித விசாரணையும் இன்றி அவசர அவசரமாக ஜெயலலிதா உடல் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அவரது மறைவிற்கு ஒருவருடம் கழித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.