1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (15:36 IST)

வாஷிங் மெஷினுக்குள் தவறி விழுந்த குழந்தை ....அதிர்ச்சி சம்பவம்

Born Child
டெல்லி வசந்த்கன்ஞ் பகுதியில் வாஷிங் மெஷினில் ஒரு குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி வசந்த்கன்ஞ் என்ற பகுதியில், உள்ள ஒரு வீட்டில் சோப்பு தண்ணீர் நிரம்பிய டாப் லோட் வாஷிங் மெஷினில், ஒரு குழந்தை தவறுதலாக விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அருகில் இருந்த நாற்காலியில் ஏறி குழந்தை வாஷிங் மெஷினில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குழந்தையைக் காணாமல், வீடு முழுவதும் தேடிப் பின், வாஷிங் மெஷினுக்குள் மயங்கிக் கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே குழந்தையை மீட்டில், தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இதில், 7 நாட்கள் மயங்கிய நிலையில், கோமாவில் இருந்த குழந்தையை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்ச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.