1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (14:16 IST)

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு..!

schools
திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 
 
மகா சிவராத்திரி முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி விடுமுறை என திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மழை காரணமாக தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே.
 
ஆனால் நாளைய சனிக்கிழமை மட்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நாளை மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran