வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (16:09 IST)

பாஜக மீண்டும் தனித்துப் போட்டியிட முடிவு

புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேர்தலிலும் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு சில இடங்களில் வென்றது.

இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் வரவுள்ள தேர்தலிலும் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாதக தகவல் வெளியாகிறது.

தற்போது புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.கானங்கிரஸ் –பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக  இவ்விரு கட்சிகளுக்கு இடையே பிரச்சனை அஎற்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப்  போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது.