செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (12:12 IST)

பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் கொரோனா! – அதிர்ச்சியில் தஞ்சாவூர்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவிய நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து ஆலத்தூர், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

100க்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு 2 வாரம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தஞ்சை மாவட்ட கல்லூரிகளிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், திருவையாறு அரசு கல்லூரி மாணவர் ஒருவருக்கும், கும்பகோணம் தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.