புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 25 டிசம்பர் 2018 (17:17 IST)

ஜெயலலிதா மரணத்திற்கு தி.மு.க, காங்கிரஸ் தான் காரணம்: பகீர் கிளப்பும் தம்பிதுரை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி தான் என தம்பித்துரை குற்றம் சாட்டியுள்ளார்.
கரூரில் மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளருமான தம்பித்துரை., அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., இந்திய அளவில் தேசிய கட்சிகள் என்பது தேசிய கண்ணோட்டத்துடன் பார்த்தால், பா.ஜ.க வும்., சரி காங்கிரஸ் கட்சியும் சரி இனிமேல் தேசிய கட்சிகள் பகல் கனவு காண வேண்டாம், மேலும் கம்யூனீஸ்ட் கட்சி காணாமல் போய் விட்டது. 
 
மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் எங்கும் ஆட்சி அமைக்க முடியாது தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் ஆக இருந்தாலும் சரி, வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி என்று கூறிய தம்பித்துரையிடம்., நாளை நமதே, நாற்பதும் நமதே என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது போல, 40 தொகுதிகளில் தனித்து போட்டியா ? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இன்றைய நிலையில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் செயலினால், விருது நகரில் செயல்திட்டங்கள் ஆரம்பிக்கும் போது கூறியவாறு, தனித்து போட்டியிட்டாலும், அ.தி.மு.க தான் ஜெயிக்கும், தேர்தல் வந்தால் ஒரு சமயம் தலைமை கூட்டணி பற்றி யோசிக்கலாம் என்றார். 
மேலும் அனைத்து கட்சிகளிடத்திலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விட்டுள்ளாரே என்று கேள்வி கேட்டதற்கு அவர் சவால் விட்டு கொண்டே தான் இருப்பார், வெற்று சவால் தான் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் இடையூறாக இருக்கும், ஏன் என்னிடம் சவால் விடட்டும், எந்த கட்சியானது மேகதாது மற்றும் டி.பி.ஆர் கட்ட அனுமதி கொடுத்தது என்று என்னிடம் விவாதிக்க முடியுமா ? அதைவிட்டு விட்டு, திராவிட கட்சிகள், திராவிட கட்சிகள் என்று ஒரங்கட்ட பார்க்கின்றது. ஆக, திராவிட கட்சிகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்றதோடு, பா.ஜ.க வுடன் அ.தி.மு.க கூட்டணி இல்லை என்றும் இப்போதுன்வரை இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். 
மேலும்., கஜா புயல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து வருகின்றோம் அதே நேரத்தில், தமிழகத்தில் கஜா புயல் குறித்து மு.க.ஸ்டாலினின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி ஏன் வந்து பார்க்க வில்லை என்றும் கேள்வி எழுப்பிய நிலையில், கேரளாவில் ஒக்கி புயல் மற்றும் குஜராத்திலும் பார்வையிட்ட ராகுல் காந்தி ஏன், தமிழகத்தினை வஞ்சிக்கின்றாரா ? ஆகவே, தான் இவர்களுக்கு தமிழ்நாடு பிடிக்காத நாடாக உள்ளது, இது போன்ற அரசியல் தேவையற்ற ஒன்று, மேலும், ஸ்டாலின் சொந்த தகப்பன் ஊரான திருவாரூருக்கு இப்போது வந்தாரா ? அவர் கட்சி சார்பில் வந்தாரா ? 
 
முதல் நாள் மட்டும் வந்து விட்டு ஏதோ சொல்லி விட்டு சென்ற தி.மு.க ஸ்டாலின் இப்போது வரை ஏன் வரவில்லை என்றார். திராவிட இயக்கத்தினை அழிக்க தான், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி, ஆகவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு மூலக்காரணம் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் அரசு தான், அவர் மீது, வீண்பழி சுமத்தி சிறை சென்றதற்கு மூலக்காரணம் ஆகவே நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள். அவர்கள் தொடுத்த பொய் வழக்கு தான் சிறையில் இருந்து அவர் மனரீதியாக துன்பப்பட்டு பின்பு இறந்துள்ளார் என அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
 
C. ஆனந்தகுமார்