செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2021 (12:19 IST)

தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்: தீவிர கண்காணிப்பில் மருத்துவரகள்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான தா பாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் 
 
இந்த நிலையில் தா பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. தா பாண்டியன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாகவும் அது மட்டுமின்றி ரத்த அழுத்தமும் இருப்பதாகவும் அதற்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது 
 
இந்த நிலையில் தா பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்ததும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அவரது உடல்நிலை 24 மணி நேரமும் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது