சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி ஊர்வலம்: கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்!

சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி ஊர்வலம்
siva| Last Updated: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:04 IST)
சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி ஊர்வலம்
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 மற்றும் 50 என மொத்தம் 75 ரூபாய் சிலிண்டர் விலை ஏற்றப்பட்டதால் தற்போது 785 ரூபாய் என சிலிண்டர் விலை விற்பனையாகி வருகிறது
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை அடுத்து மதுரை அலங்காநல்லூர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்தினர்

இந்த ஊர்வலத்தில் அந்த பகுதியில் உள்ள ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய நூதன போராட்டம் குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :