1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala is stable says hospital

கொரோனா குறைந்தாலும், சர்க்கரை குறையவில்லை: சசிகலா ஹெல்த் அப்டெட்!

Sasikala
சசிகலாவின் உடல்நிலை எப்படி உள்ளது என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 
 
அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடுமையான நிமோனியா காய்ச்சல் இருப்பதாக சொல்லப்படுகிறது. விடுதலை ஆக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சசிகலாவின் உடல்நலக் குறைவு பலவிதமான சந்தேகங்களை எழிப்பியுள்ளது.
 
இந்நிலையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனால், சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash