மீனவர் வேடத்தில் தீவிரவாதி: ராமநாதபுரத்தில் கைது!
ராமநாதபுரத்தில் மீனவர் வேடமிட்டு தலைமறைவாக இருந்த தீவிரவாதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில் சுற்றி திரிந்த தாவூத் என்ற தீவிரவாதியை போலீஸார் கைது செய்துள்ளனர். சமீப காலமாக தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட தாவூத் அளித்துள்ள வாக்குமூலம் மேலும் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் களியக்காவிளை பகுதியில் பயங்கரவாதிகளால் எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்தது இந்த தாவூத் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் இந்த தாவூத் என்பதும் தெரிய வந்துள்ளது.