1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (10:29 IST)

அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அழைப்பு.. தீவிரமாகும் போராட்டம்..!

கடந்த இரண்டு நாட்களாக  போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
அரசு தரப்பில் இருந்து 100% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டாலும் இன்னும் பல பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த நிலையில்  அரசு பேருந்துகளை இயக்குவதற்கு தற்காலிக ஓட்டுநர் நடத்துனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்காலிகமாக பேருந்துகளை ஓட்டுவதற்கும் நடத்தினர் பணிக்கும் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஏராளமானோர் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளை விண்ணப்பத்துடன் அணுகி வருவதாக கூறப்படுகிறது. 
 
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதை அடுத்து அரசு தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை நியமனம் செய்ய முடிவு செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran