புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (11:43 IST)

காதலை மறுத்த பெண்; வீட்டு முன்பு வசிய பூஜை செய்த இளைஞர்! – தெலுங்கானாவில் பரபரப்பு!

காதலை ஏற்க மறுத்த பெண்ணை வசியம் செய்ய யூட்யூப் பார்த்து பூஜை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் அடிக்கடி செல்போன் வழியாக பேசி வந்துள்ளார். அவரை நேரில் சந்திக்கும்படி கேட்டு வந்த நிலையில் முரளியை நேரில் சந்தித்த பெண் அவரை பிடிக்காததால் அவருடன் பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரை வசியம் செய்ய யூட்யூபில் பல வீடியோக்களை பார்த்த முரளி சுடுகாட்டிற்கு சென்று மண்டையோடு உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து காதலியின் வீட்டு முன்பு வசிய பூஜை நடத்தியுள்ளார். வீட்டின் முன் அமானுஷ்யமான பொருட்களை வைத்து முரளி செய்த காரியம் குறித்து பெண் அளித்த புகாரில் முரளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.