தமிழக நிதியமைச்சரை அவதூறாக பேசியவர் கைது!

arrest
தமிழக நிதியமைச்சரை அவதூறாக பேசியவர் கைது!
siva| Last Updated: திங்கள், 5 ஜூலை 2021 (19:37 IST)

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றார் என்பதும் தமிழகத்தின் முக்கிய அமைச்சர் பொறுப்பான நிதி அமைச்சர் பொறுப்பை மதுரையைச் சேர்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பதவி ஏற்றார் என்பதும் தெரிந்ததே

நிதி அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு ஆக்கபூர்வமான செயல்களை செய்து கொண்டிருக்கும் பழனிவேல் தியாகராஜன் அவர்களை மதுரையைச் சேர்ந்த தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் கேசி திருமாறன் என்பவர் அவதூறாக பேசிய தெரிகிறது


இதனை அடுத்து நீதியமைச்சர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கேசி திருமாறனை மதுரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் கருத்து சுதந்திரம் குறித்து அவ்வப்போது பேசும் திமுக கருத்து சுதந்திரமாக பேசியவரை கைது செய்துள்ளதாக தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :