ரஜினிகாந்த் சென்ற விமானதில் தொழில்நுட்பக்கோளாறு: பரபரப்பு தகவல்

திங்கள், 27 ஜனவரி 2020 (11:02 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் இருந்து மைசூருக்கு இன்று காலை விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற விமானம் நடுவானில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக விமான ஓட்டிகள் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அளித்தனர் 
 
இந்த தகவலின் அடிப்படையில் விமானம் உடனடியாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன்படி விமானம் பத்திரமாக தரையிறங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த் உள்பட பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அனைவரும் பத்திரமாக உள்ளார்கள் என்றும் அவர்கள் அனைவரும் மாற்று  விமானம் மூலம் மைசூருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒன்று தகவல் வெளிவந்துள்ளது 
 
ரஜினிகாந்த் சென்ற விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக வெளிவந்த செய்தியால் ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் ரஜினிகாந்த்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற தகவல் ரசிகர்களை நிம்மதி அடையச் செய்துள்ளது

எல்லாம் காட்டு

தனியார் கல்லூரியில் அதிக கட்டணம்!.. அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!...

தவெக கொடி கட்டிய கார்!.. தவெகவில் இணைகிறாரா சிவி சண்முகம்?!..

உடம்பு சரியில்ல.. விசாரணைக்கு வர மாட்டேன்!.. லஞ்ச ஒழிப்பு துறையிடம் சொன்ன எ.வ.வேலு..

அதிமுக மட்டுமில்ல!.. திமுகவுக்கும் ஸ்கெட்ச்!.. தவெகவில் இணைந்த உதயநிதி டீம்!

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை பணம் மோசடி.. ஆர்.எஸ்.எஸ். கூறிய அதிர்ச்சி கருத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments