1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (15:23 IST)

போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்கம்.. பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு..!

சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர் லா உஷா பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே 3 சங்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு பகுதி நேர ஆசிரியர் சங்கமும் இணைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் நான்கு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
 முன்னதாக போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது 
 
இன்று அல்லது நாளை இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva