வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (12:12 IST)

துரத்தி துரத்தி வெட்டிய காதலன்: துடிதுடித்து இறந்த ஆசிரியை!

காதலித்துவிட்டு குடும்ப சூழ்நிலையால் திருமணம் செய்ய மருத்த காதலியை, காதலன் நடுரோட்டில் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கும்பகோணத்தில் உள்ள திருவடைமருதூரில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் 24 வயதான வசந்த பிரியா. இவரும் நந்தகுமார் என்பரும் காதலித்து வந்துள்ளதகா தெரிகிறது. 
 
ஆனால், இவர்களது காதலுக்கு வசந்த பிரியாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் வேறு வழியின்றி வசந்த பிரியா தனது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடிவெடுத்தார். 
 
அதன்படி கடந்த 5 நாட்களுக்கு முன்னர்தான் வசந்தபிரியாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதனால் விரக்தியில் இருந்த நந்தகுமார், வசந்தபிரியாவை சந்திக்க வேண்டும் என கெஞ்சியுள்ளார். இதனால் மனமிறங்கிய வசந்தபிரியா பள்ளி முடிந்ததும் நந்தகுமாருடன் பைக்கில் சென்றுள்ளார். 
இருவரும் காவிரி ஆற்றங்கரை படித்துறைக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு நந்தகுமார் நீ என்னதான் திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தியதால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நந்தகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எழுத்து வசந்தபிரியாவில் கழுத்தை அறுத்துள்ளான்.
 
ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் ஓடிய வந்த வசந்தபிரியா நிலைதடுமாறி விழுந்து துடிதுடிக்க உயிரை விட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வசந்தபிரியாவின் உடலை கைப்பற்றி பின்னர் மேற்கொண்ட விசாரணையில், சிசிடிவி பதிவுகள் மூலம் நந்தகுமார்தான் கொலை செய்தார் என கண்டுபிடித்து இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.