ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (15:44 IST)

தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ₹5000 கோடி முதலீடு

tata
தமிழகத்தில் டாடா நிறுவனம் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
டாடா நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக இன்று அறிவித்துள்ளது. ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையில் 5,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன் காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைய இருப்பதாகவும் இந்த தொழிற்சாலை வந்தால் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.