Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமாற்றிய மதுப்பிரியர்கள்: தலையில் துண்டு போட்ட அரசு??

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 19 மே 2020 (10:01 IST)
டாஸ்மாக் கல்லா கட்டும் என எதிர்ப்பார்த்த அரசுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஊரடங்கு இடையே டாஸ்மாக் திறந்த போது அரசு முன் வந்தபோது உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது. இதுகுறித்த மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
 
மதுக்கடைகள் திறக்கப்பட்டதோடு கூடுதல் நேரம், கூடுதல் டோக்கன் மதுப்பிரியர்களுக்காக வழங்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கல்லா கட்டும் என எதிர்ப்பார்த்த அரசுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. 
 
ஆம், தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் டாஸ்மாக் விற்பனை நீட்டிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் மூலம் வரும் வருவாய் மேலும்  குறைந்துள்ளது. முதலில் ரூ.163 கோடியிலிருந்து ரூ.133 கோடியாக குறைந்த டாஸ்மாக் வருவாய், 3 ஆம் நாளான நேற்று மேலும் குறைந்து ரூ.109 கோடியானது. 
 
இப்படியே நாளுக்கு நாள் டாஸ்மாக் வருமான குறைவது அரசு அதிர்ச்சியை ஏற்படுத்த கூடும். ஏன் என்றால் தமிழக அரசு மது விற்பனையை அரசின் முக்கிய வருமானமாக பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
3 ஆவது நாளான திங்கள்கிழமை விற்பனை நிலவரம்:
மதுரை மண்டலம் - ரூ. 28.6 கோடி
திருச்சி மண்டலம் - ரூ. 27.4  கோடி
சேலம் மண்டலம் - ரூ. 24.3 கோடி
கோவை மண்டலம் - ரூ. 22.5 கோடி
சென்னை மண்டலம் - ரூ. 6.5 கோடி  

எல்லாம் காட்டு

திருச்செந்தூர் செல்லாமல் கிடைக்கும் பிரசாதம்.. ஆன்லைனில் பன்னீர் இலை விபூதி வாங்குவது எப்படி?

1ஆம் வகுப்பு முதல் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலை: மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்..

ஒரு பொருளை தயாரிக்கும் அறிவு இருந்தால் மட்டும் போதாது.. வெற்றி பெற இன்னொன்றும் முக்கியம்: ஸ்ரீதர் வேம்பு

அமெரிக்காவிடம் 95 ஆயிரம் கோடி கடன் கேட்கும் பாகிஸ்தான்!....

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. சுமார் 300 நாள் பேட்டரி நிற்கும்.. Garmin நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்...

அடுத்த கட்டுரையில்
Show comments