Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கில் மதுவாங்க புதிய கட்டுப்பாடுகள்! – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

Written By Prasanth Karthick
Updated: புதன், 12 ஜனவரி 2022 (10:52 IST)
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க புதிய கட்டுப்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வழிபாட்டு தலங்கள் மூடல் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.

இந்நிலையில் தற்போது டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடு அறிவிப்பில், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மாஸ்க் அணிய வேண்டும். சானிட்டைசர் உள்ளிட்ட கிருமி நாசினிகள் டாஸ்மாக் கடைகளில் வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மது வாங்க வருவோர் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும், ஒவ்வொரு நபரும் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நின்றே மது வாங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு மது விற்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

அமெரிக்கா வரி போட்டா நாங்களும் வரி போடுவோம்!.. கனடா பிரதமர் அதிரடி!...

நாங்களா? அவங்களா?.. முடிவு பண்ணுங்க!.. முதல்வருக்கு சி.பி.எம் சண்முகம் கேள்வி!..

சட்டசபையை ஷூட்டிங் ஸ்பாட்டாக நினைக்கிறார் விஜய்!.. ஸ்டாலின் தாக்கு!...

மாமா.. மச்சான்!. நல்லவேளையா நானும், ஸ்டாலினும் அங்க இல்ல.. துரைமுருகன் புலம்பல்...

சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் சூப்பர்.. பாராட்டிய முக ஸ்டாலின்!.. நடந்தது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments