வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (15:56 IST)

கிண்டி கத்திப்பாராவில் விபத்து – லாரி மோதி காவலர் பலி !

கிண்டி கத்திபாரா பாலத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த போக்குவரத்துக் காவலர் லாரி மோதி உயிரிழந்துள்ளார்.

தாம்பரம் சானடோரியம் பகுதியில் வசித்து வரும் போக்குவரத்து காவல்துறை எஸ் ஐ நடராஜன்(56). இவர் குடியரசுத்தலைவர் வருகையை ஒட்டி  நடந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். காலை 11.30 மணியளவில் கிண்டி கத்திபாரா பாலத்தில் சென்றுள்ளார்.

அப்போது மீனம்பாக்கம் வளைவில் சென்று கொண்டிருந்த அவருக்குப் பின்னால் சிமெண்ட் லாரி ஒன்று வந்துள்ளது. சாலையின் நடுவில் செல்லாமல் நடராஜன் இடதுபுறமாக சென்றுள்ளார். இதனால் பூந்தமள்ளி வளைவில் லாரி வளையும் போது இடதுபுறமாக ஒட்டி சென்ற அவரின் பைக் மீதி மோதியுள்ளது. இந்த விபத்தில் அவரது ஹெல்மெட் உடைந்து தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பரங்கிமலை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.