பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் நான்கு பேருக்குக் கொரோனா! தஞ்சாவூரில் அதிர்ச்சி!
தஞ்சாவூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நான்கு மாணவிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் ஆங்காங்கே பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இப்போது தஞ்சாவூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் 4 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.