1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (09:18 IST)

அவர் சொன்ன அழகு வேறு – தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் !

தேர்தல் பிரச்சாரத்தின் அழகான வேட்பாளர் என்று கூறிய உதயநிதியின்  பேச்சுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கமளித்துள்ளார்.

திமுக தான் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது. தென் சென்னை தொகுதியில் களமிறங்கும் எழுத்தாளரான தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் அவரை அழகான வேட்பாளர் எனக் கூறினார்.

பிரச்சாரத்தின் போது ‘இந்த தொகுதி வாக்காளர்கள் ஒரு அழகான வேட்பாளரை இழந்துவிடக்கூடாது. நான் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை அழகு என்று சொன்னது அவருடைய உருவத்தை வைத்து மட்டுமல்ல, அவரது அழகு தமிழ் மற்றும் தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்றை குறிக்கும்’ எனக் கூறினார். இந்த உரை முழுவதையும் கேட்காமல் ஊடகங்கள் உதயநிதி ஸ்டாலின் தமிழச்சியை அழகான வேட்பாளர் எனக் கூறினார் என்பதை மட்டும் முன்னிறுத்தினர்.

இதையடுத்து இப்போது உதயநிதியின் பேச்சுக்கு தமிழச்சி விளக்கமளித்துள்ளார். கே கே நகரில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் ‘பெண்கள் பொதுவெளியில் வந்தாலே சமூக ஊடகங்கள்தான் ஏதேனும் சிறிய விஷயத்தைக் கூட பெரிதுபடுத்திக் காண்பிக்கின்றன. அழகு என்று கூறியதற்கான விளக்கத்தை உதயநிதியே தந்துள்ளார். ஒரு கருத்தை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தொடக்க உரையை மட்டும் வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனம் செய்வது ஆரோக்கியமானது கிடையாது’ என விளக்கமளித்துள்ளார்.