4 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காற்று மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னையில் பல பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று திருவள்ளூர், வேலூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், நாளை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.