வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (09:00 IST)

மழையை நினைச்சு சந்தோசமா.. பொளக்க வருது வெயில்! – வானிலை ஆய்வு மையம் குடுத்த அப்டேட்!

Rain
தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்த நிலையில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



கோடை காலம் நடந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 106 பாரன்ஹீட்டாக பதிவானது. இந்நிலையில் நேற்று பெய்த மழை பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சென்னையின் புறநகர் பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் குளிர்ச்சி உண்டானதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் வரும் காலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 7 முதல் 9ம் தேதி வரை ஆங்காங்கே சில பகுதிகளில் மழை இருக்கும்.
அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 வரையில் அதிகரிக்கும். ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K