வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (15:22 IST)

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு; தகவல் தந்தால் சன்மானம்! – மாசுகட்டுப்பாட்டு வாரியம்!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யும் ஆலைகள் குறித்து தகவல் தந்தால் சன்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுற்றுசூழல் மாசுபாட்டை தவிர்க்க பிளாஸ்டிக் பை உபயோகத்தில் குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பது ஆகியவற்றை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் “தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வகைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு பாராட்டும், சன்மானமும் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.