1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry CM announce relief fund for flood

மழை, வெள்ள நிவாரணமாக ரூ.5 ஆயிரம்! – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Tamilnadu
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் நிவாரண தொகை வழங்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் புதுச்சேரியில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
அமேசான் ஆர்டர்கள் அபேஸ்; வண்டியோடு கம்பி நீட்டிய டிரைவர்! – கர்நாடகாவில் பரபரப்பு!