தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு! – மக்கள் ஏமாற்றம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரமாக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் முன்னதாக தடுப்பூசி போட்டுக் கொள்ள அவ்வளவாக ஆர்வம் காட்டாத மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகை புரிய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சேலம், விழிப்புரம், கன்னியாக்குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களின் மருத்துவமனைகளில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஸ்டாக் இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக 10 லட்சம் தடுப்பூசிகள் கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.