1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (11:37 IST)

விபத்தை குறைத்துக்காட்டி அவார்ட் வாங்கிய அதிமுக! – அம்பலமான உண்மைகள்?

accident
கடந்த அதிமுக அரசு நடந்த கால கட்டத்தில் பல ஆயிரக்கணக்கான சாலை விபத்துகளை குறைத்து காட்டியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் 2017 முதல் 2020ம் ஆண்டு வரை பெருவாரியான சாலை விபத்துகள் குறைந்திருந்ததாக தரவுகளில் காட்டப்பட்டிருந்தது. இதனால் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டில் சாலை பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அரசின் ”சாலை பாதுகாப்பு விருது” தமிழகத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆய்வுகளில் பெருவாரியான விபத்து எண்ணிக்கைகள் தரவில் குறைத்து காட்டியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய தரவுகளின் படி 2017 முதல் 2020 வரை 4 ஆண்டுகளில் முன்னதாக காட்டப்பட்ட தரவுகளை விட 22,018 பேர் கூடுதலாக உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால் தமிழக அரசிற்கு வழங்கப்பட்ட சாலை பாதுகாப்பு விருது திரும்ப பெறப்படும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.