வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (12:44 IST)

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நஹி பேட்டா! – தமிழக அரசு அதிரடி உத்தவு!

நாடு முழுவதும் ஆகஸ்டு 22 அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் கோலாகலமான கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி ஆகஸ்டு 22 கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா காரணமாக விநாயகர் சிலைகள் அமைக்க வழிபட தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்குமாறு இந்து அமைப்புகள் சில கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில் தமிழக அரசு தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தியை மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடி கொள்ள வேண்டும். வீதிகள், கோவில்கள், தெருக்களில் விநாயகர் சிலைகள் வைத்தல், வழிபடுதல், ஊர்வலம் செல்லுதல் மற்றும் அதை நீர்நிலைகளில் கரைத்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செயல்படாதவாறு காவல்துறையினரை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பினால் இந்து அமைப்புகள் ஏமாற்றம் அடைந்துள்ளன. எனினும் கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.