செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:21 IST)

மணியம்மையின் தந்தையான ஈவேராவின் நினைவு தினமான இன்று – சர்ச்சையை கிளப்பிய தமிழக பாஜக !

தந்தை பெரியாரின் 46-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக பாஜக அவரை இழிவுபடுத்தும் விதமாக ட்விட்டரில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளது.

திராவிட இயக்கத்தின் பிதாமகரும் தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராகவும் விளங்கியவர் தந்தை பெரியார். அவரின் 46-வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரையும் அவரது மனைவி மணிமேகலையும் இழிவு செய்யும் விதமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளது.

அதில் ‘மணியம்மையின் தந்தை ஈ.வே..ராமசாமியின் நினைவு தினமான இன்று!! குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ (Pocso) குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிகொள்வோம்’ என அறுவறுக்கத் தக்க வகையில் ஒரு பதிவைப் போட்டது. இந்த பதிவுக்கு கண்டனங்கள் எழவே உடனடியாக அதை நீக்கியுள்ளனர்.