1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (22:27 IST)

தமிழக பாஜக தலைவராக முன்னாள் காங்கிரஸ் தலைவர்?

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது
 
இந்த தலைவர் பதவியை நிரப்ப பாஜக மேலிடம் தீவிர முயற்சி செய்து வருகிறது. கே டி ராகவன், பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி சீனிவாசன், எஸ் வி சேகர் உள்பட பலரது பெயர்கள் இந்த பதவிக்காக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தமிழக பாஜக தலைவர் யார் என்பதை பாஜக மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக முன்னாள் காங்கிரஸ் பிரமுகரும் தமிழ் மாநில கட்சியின் தலைவருமான ஜிகே வாசன், பாஜக தமிழக தலைவராக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது 
 
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு ஜிகே வாசன் பாஜகவில் இணைய இருப்பதாகவும், அதற்கு பதிலாக அவருக்கு அந்த பதவியை தர பாஜக மேலிடம் ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
அதிமுகவின் முன்னணி தலைவராகவும் பாஜகவின் முக்கிய தலைவராகவும் இருந்த திருநாவுக்கரசு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி ஏற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரமுகர் பாஜகவின் தலைவராக ஏன் பதவி ஏற்க கூடாது? என அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்