Daily Horoscope

டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் காற்று மாசு??

Written By Arun Prasath
Updated: திங்கள், 4 நவம்பர் 2019 (08:49 IST)
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காற்று மாசு வரலாறு காணாத அளவு அதிகரித்து வருகிறது. காற்று மாசு கட்டுபடுத்த டெல்லி அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிகரித்துவரும் காற்று மாசால், டெல்லி மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் சாலையில் செல்வோர்கள் முகத்தை துணிகளால் மூடிக்கொண்டே செல்கின்றனர்.

காற்று மாசால் டெல்லி பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியை போல தமிழ்நாட்டிலும் காற்று மாசு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் என்ற தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் “டெல்லியையும் வட இந்தியாவையும் கடந்த ஒரு வாரமாக வாட்டிக்கொண்டிருக்கும் காசு மாற்று தமிழகம் உட்பட கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கு அடுத்த வாரத்திற்குள் பரவும் அபாயம் உள்ளது” என தெரிவித்துள்ளார். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

ஐந்தறிவு கூட்டம் போட்ட ஓட்டால் நாம கஷ்டப்படுறோம்!.. விஜயை விளாசிய ஜேம்ஸ் வசந்தன்...

4 நாளைக்கு பேங்க் லீவ்!.. நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!..

லண்டனில் அஜித் கார் ரேஸை துவங்கி வைக்கும் விஜய்!.. பின்னணி என்ன?....

அதிமுக, திமுக கூட்டணிகள் தனித்து போட்டியிட்டால் தவெக வெற்றி உறுதி.. அரசியல் விமர்சகர்கள்...

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. தவெக ஆட்சியிலும் ஆம்னி பேருந்தில் கட்டண கொள்ளை...

அடுத்த கட்டுரையில்
Show comments