புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (16:23 IST)

இந்த பக்கம் கொரோனா; அந்த பக்கம் நிபா! – தமிழகத்தில் கடும் ஊரடங்கா?

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் தற்போது நிபா அச்சுறுத்தலும் உள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் தினசரி பாதிப்புகள் மீண்டும் உயரத்தொடங்கியுள்ள நிலையில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதற்கிடையே கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 12 வயது சிறுவன் நிபா வைரஸால் உயிரிழந்துள்ளான். இதனால் தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா, நிபா வைரஸ் பரவுதலை தடுக்கு தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.