வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 ஜூன் 2018 (17:01 IST)

நான் எதையும் பேசவில்லை: அன்புமணியை கடுமையாக சாடிய தமிழிசை

அன்புமணி ராமதாஸ் - தமிழிசை இடையே ஏற்பட்ட டுவிட்டர் மோதலால் பாமகவினர் சென்னை பாஜக தலைமை அலுவலத்தை முற்றுகையிட்டதை அடுத்து தமிழிசை அன்புமணி ராமதாஸை கடுமையாக சாடியுள்ளார்.

 
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் எம்.பி. அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதலால் பாமகவினர் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 
இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக தமிழிசை அன்புமணியை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
புத்திசாலித்தானம் இல்லாத பதிவுகளை அன்புமணி போட்டு வருகிறார். 20 ஆண்டுகால கடினமான உழைப்புக்கு அறிவாற்றல், தேசிய பண்பு இருப்பதால்தான் ஒரு கட்சியின் தலைவராகியுள்ளேன். நான் அரசியல் கட்சி தலைவரின் மகள்தான்.
 
அந்த நிழலில் நான் நிச்சயமாக தலைவராகவில்லை. எனது சுயஉழைப்பினால் தலைவராகியுள்ளேன். என்னை பற்றி பேச அன்புமணிக்கு தகுதியில்லை. சுகாதாரத் துறைக்கு தகுதியானர்கள் பலர் இருந்தும் ராமதாஸின் மகன் என்பதாலே அமைச்சாரானார்.
 
ராமதாஸ் என்ன சொல்லியிருந்தார். எங்கள் வீட்டிலிருந்து யாராவது அமைச்சராகவோ சட்டமன்ற உறுப்பினராகவோ ஆகினால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்றார். இப்போது என்ன செய்வது. அன்புமணியுடன் நான் விவாதிக்க தயாராக உள்ளேன் என்று கூறினார்.
 
மேலும், நான் என்ன தவறு செய்தேன், மன்னிப்பு கேட்பதற்கு? என்றும் கூறினார்.