வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (11:57 IST)

இலங்கை அதிபர் தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி..!

Srilanka
இலங்கை அதிபர் தேர்தலை இலங்கை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா அவர்கள் கூறிய போது ’இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெற்றால் தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்யப்போவதில்லை, அது குறித்து எந்த உறுதி மொழியும் அவர்கள் அளிக்கவில்லை. எனவே இந்த தேர்தலை இலங்கை தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டு பிரசுரங்களை வழங்கும் பணியை தொடங்கி உள்ளோம். ஆனால் போலீசார் அதை தடுக்கின்றனர். இந்த விவகாரத்தில் போலீசாருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்பட 39 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அதிபர் தேர்வுகளில் முன்னாள் எம்பி பாக்கிய செல்வம் என்ற தமிழர் பொது வேட்பாளராக நிறுத்த முயற்சி நடந்த நிலையில் அது நடைபெறாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran